Tuesday, November 27, 2007

பாலைவனத்தில் ஒர் வண்டு

நமிப் பாலைவனத்தில் உள்ள ஒரு வகையான வண்டால எப்படி தண்ணீர்யில்லாம் உயிர் வாழ முடியுதுனு பண்ண ஆராய்ச்சி பத்தி 2001 ல் வெளியான நெச்சர் (Nature) ஆராய்ச்சி கட்டுரையில சொல்லியிருக்காங்க (1).


(Source : Nature , Vol 414, (2001) 33. )

பாலைவனத்திலே பகலிலே மிகவும் கடிமையான வெப்பமும், இரவிலே குளிரும் இருக்கும், இதனாலே, விடிகாலையிலே, காற்றில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும். காற்றில் இருக்கும் இந்த ஈரத்தை கொண்டு தான் இந்த வண்டு உயிர் வாழுது. இந்த வண்டின் இறக்கையின் மேற்புறத் தோற்றம், படத்திலே காட்டப்பட்டுள்ளது. இதன் இறக்க்கையின் மேற்புறம் ஒரு மெழுக்கு பூச்சும் அதன் மேல், பல சிறு திட்டு போன்ற அமைப்பும் காணலாம். திட்டு போன்ற அமைப்பு நீரை படர செய்யும் தன்மையை கொண்டது ( hydrophillic) , ஆனால் மெழுகு போன்ற பகுதி நீரை படர விடாத (hydrophobic) தன்மை கொண்டது. விடியற்காலையிலே காற்றின் திசைக்கு எதிராக ரெக்கைய இந்த வண்டு விரிக்கும். அப்போது நீரை படர விடும் திட்டிலே நீர் பரவி, பின் ஒர் அளவு பெரியதான பின் மெழுகு பூச்சின் மேல் வரும், இந்த மெழுகு பூச்சு நீரை படரவிடாது எனவே நீர் உடனடியாக உருண்டோட துவங்கும். வண்டின் இறக்கைகள் அதன் வாயை நோக்கி சாய்வாக குவிக்க பட்டு இருப்பதால், வண்டின் வாய்கு நீர் நேரடியா வந்தடைகின்றது.


இந்த ஆய்வின் முடிவுகளை தொடர்ந்து இது போன்ற அமைப்பை செயற்க்கையாக உருவாக்க முயற்ச்சி அமெரிக்காவில் உள்ள MIT என்ற புகழ் பெற்ற பல்கலைகழகத்திலே தொடங்கப்பட்டது.

இந்தக் குழு, பாலிமர்களை கொண்டு உருவாக்கப்பட்ட செயற்க்கை பரப்பையும், அதன் பயன்கள் பற்றியும் சென்ற ஆண்டு நேனோ லெட்டர்ஸ்ல் (nano letters) வெளியிட்டுள்ளார்கள் (2). இத்தகைய பரப்புக்கள் தண்ணீர் அறுவடை ( water harvesting ), கண்ட்ரோல்டு ட்ரக் டெலிவரி ( controlled drug delivery ) போன்ற தொழில்நுட்பத்திற்க்கு பயன்னுள்ளாதாக இருக்கும் என கணித்துள்ளார்கள். நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இந்த தொழில்நுட்பம் வரும் நாள் தொலைவில் இல்லை.

(1) A.R Parker et al, Nature, Vol 414 (2001) 33.

(2) L. Zhai et al, Nano Letters, Vol 6 (6) (2006) 1213.

No comments: