Tuesday, November 27, 2007

பாலைவனத்தில் ஒர் வண்டு

நமிப் பாலைவனத்தில் உள்ள ஒரு வகையான வண்டால எப்படி தண்ணீர்யில்லாம் உயிர் வாழ முடியுதுனு பண்ண ஆராய்ச்சி பத்தி 2001 ல் வெளியான நெச்சர் (Nature) ஆராய்ச்சி கட்டுரையில சொல்லியிருக்காங்க (1).


(Source : Nature , Vol 414, (2001) 33. )

பாலைவனத்திலே பகலிலே மிகவும் கடிமையான வெப்பமும், இரவிலே குளிரும் இருக்கும், இதனாலே, விடிகாலையிலே, காற்றில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும். காற்றில் இருக்கும் இந்த ஈரத்தை கொண்டு தான் இந்த வண்டு உயிர் வாழுது. இந்த வண்டின் இறக்கையின் மேற்புறத் தோற்றம், படத்திலே காட்டப்பட்டுள்ளது. இதன் இறக்க்கையின் மேற்புறம் ஒரு மெழுக்கு பூச்சும் அதன் மேல், பல சிறு திட்டு போன்ற அமைப்பும் காணலாம். திட்டு போன்ற அமைப்பு நீரை படர செய்யும் தன்மையை கொண்டது ( hydrophillic) , ஆனால் மெழுகு போன்ற பகுதி நீரை படர விடாத (hydrophobic) தன்மை கொண்டது. விடியற்காலையிலே காற்றின் திசைக்கு எதிராக ரெக்கைய இந்த வண்டு விரிக்கும். அப்போது நீரை படர விடும் திட்டிலே நீர் பரவி, பின் ஒர் அளவு பெரியதான பின் மெழுகு பூச்சின் மேல் வரும், இந்த மெழுகு பூச்சு நீரை படரவிடாது எனவே நீர் உடனடியாக உருண்டோட துவங்கும். வண்டின் இறக்கைகள் அதன் வாயை நோக்கி சாய்வாக குவிக்க பட்டு இருப்பதால், வண்டின் வாய்கு நீர் நேரடியா வந்தடைகின்றது.


இந்த ஆய்வின் முடிவுகளை தொடர்ந்து இது போன்ற அமைப்பை செயற்க்கையாக உருவாக்க முயற்ச்சி அமெரிக்காவில் உள்ள MIT என்ற புகழ் பெற்ற பல்கலைகழகத்திலே தொடங்கப்பட்டது.

இந்தக் குழு, பாலிமர்களை கொண்டு உருவாக்கப்பட்ட செயற்க்கை பரப்பையும், அதன் பயன்கள் பற்றியும் சென்ற ஆண்டு நேனோ லெட்டர்ஸ்ல் (nano letters) வெளியிட்டுள்ளார்கள் (2). இத்தகைய பரப்புக்கள் தண்ணீர் அறுவடை ( water harvesting ), கண்ட்ரோல்டு ட்ரக் டெலிவரி ( controlled drug delivery ) போன்ற தொழில்நுட்பத்திற்க்கு பயன்னுள்ளாதாக இருக்கும் என கணித்துள்ளார்கள். நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இந்த தொழில்நுட்பம் வரும் நாள் தொலைவில் இல்லை.

(1) A.R Parker et al, Nature, Vol 414 (2001) 33.

(2) L. Zhai et al, Nano Letters, Vol 6 (6) (2006) 1213.

Saturday, November 17, 2007

தாமரை விளைவு



ஸ்கூல்ல தான் பிட்டு காப்பி அடிப்பது தப்பு , இத படிச்சிட்டு சொல்லுங்க நீங்க காப்பி அடிப்பிங்களா மாட்டிங்களா?


தாமரை இலையில சாப்பிடறது நல்லதுன்னு, சொல்லுவாங்க. தாமரை இலையில , தண்ணி ஒட்டவே ஒட்டாது,ஏன் தெரியுமா?


ரொம்ப வருசத்துக்கு முன்னாடி , மெழுகு போல ஒரு பூச்சு தாமரை இலை மேலே இருக்கு, இந்த பூச்சு தான் தண்ணி ஒட்டாததுக்கு காரணம்னு ஆராய்சி செய்து சொன்னாங்க. ஆன சில வருஷத்துக்கு முன்னாடி தான் மிகவும் சிறிய பொருட்களை தெளிவா பார்க்கும், எலக்ட்ரான் நுண் நோக்கி கண்டு பிடிக்கப்பட்டது. இந்த எலக்ட்ரான் நுண் நோக்கி மூலமா பார்த போது, சின்னசின்னதா, நிறைய குன்று போல அமைப்ப பார்த்துடு, இந்த மெழுகு பூச்சு குன்று போல இருக்கும் அமைப்புக்கு மேல இருக்குனு முடிவுக்கு வந்தாங்க (1). இந்த சிறப்பு அம்சம் தான் தாமரையில தண்ணி ஒட்டாம இருக்க செய்யுதுனு சொல்லி இவங்க கண்டுபிடிப்புக்கு தாமரை விளைவுனு ( Lotus effect ) பேரு வைச்சாங்க.





இந்த விளைவ பயன் படுத்தி இன்னைக்கு சுய-தூய்மை (self-cleaning) தன்மையுடைய, பரப்புக்கள் தயாரிக்க படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆடைகள் இன்று நேனோ- கேர் (nano-care) என்னும் பெயரில் விற்க்கப்படுகின்றது (2). இது போல தயாரிக்க படும், கண்ணாடி சன்னலுக்கு சோப்பு போடாம தண்ணி மட்டும் விட்டு கழுவினாலே சுத்தமாகிவிடும். கார் கண்ணாடிகளுக்கு இந்த தொழில் நுட்பத்த இப்ப பயன் படுத்தறாங்க. இங்கே இருக்கிற படம் இயற்கையான தாமரை இலையும், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தாமரை போன்ற பரப்புக்களை காட்டுகின்றது.



இதை போலவே தான் பாலைவனத்தில் வசிக்கும் ஒருவிதமான வண்டினை பார்த்து காற்றில் உள்ள நீர்னை பிரிக்கும் தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. அது என்ன என்பதை விரைவில் பார்போம்.



(1) Cheng, Y T, Rodak, D E, Wong, C A and Hayden C A.

“Effects of micro- and nano-structures on the self-cleaning behaviour of lotus leaves.”

Nanotechnology 17 (2006) 1359-1362.


Monday, September 24, 2007

Montreal

என் கேமரா-லென்சில் சிக்கியவை,
St-ஜோசப் ஒர்டேரியர் , மொன்றியால், கனடா







ராணி மேரி சாலையில் இருந்து



சற்று அருகில் இருந்து



அருகில் இருந்து



இந்த ஊருக்கு, வந்த ரெண்டாவது நாளே நான் பார்த்த இடம், இது,

ஆமாம் இந்த கோபுரத்துக்கு எப்படி பச்சை பெயின்ட் அடிச்சாங்க?....கிட்டக்க போய் பார்த்தா தானே தெரியுது, காப்பர் தகடுல கட்டியிருகாங்க...சரி காப்பர் ஒரு மாதிரி, செவப்பா தானே இருக்கும், இது எப்படி பச்சை கலர்ல இருக்கு,காப்பர் நீராவியோட சேர்ந்து காப்பர் ஆக்சைட் உருவாகுது, அப்புறம் காப்பர் ஆக்சைட் காத்துல இருகின்ற சல்பேட்டோட சேர்ந்து காப்பர்சல்பைட் உருவாகுது, இந்த காப்பர்சல்பைட் பச்சை நிறம் கொண்டது, இது மட்டும்மே யில்லை, இந்த காப்பர்சல்பைட் வேதியல் அரிமானத்தையும், தடுக்கும் திறன் உடையது. அட இதுல இவ்வள்ளவு இருக்கா. இது மட்டும் இல்ல , இது தான், கானடா விலே பெரிய சர்சாம், ம்ம்ம்ம்...................இது 1904ம் வருசம் கட்டப்பட்டதாம், இது மிக பழைய கட்டிடம், அப்படினு என்கூட வந்தவர் சொன்னார், இதுயெல்லாம், விக்கிபிடியாவிலே யிருக்கு,

சரி அப்ப நம்ம பாட்டி வீட்டுல இருக்கற அண்டா, குண்டா வெல்லாம், எவ்வளவு பழைசு !...எதாவது பிடியாவில் இதை பற்றி யிருந்தா சொல்லுங்கப்பா.......