Saturday, November 17, 2007

தாமரை விளைவு



ஸ்கூல்ல தான் பிட்டு காப்பி அடிப்பது தப்பு , இத படிச்சிட்டு சொல்லுங்க நீங்க காப்பி அடிப்பிங்களா மாட்டிங்களா?


தாமரை இலையில சாப்பிடறது நல்லதுன்னு, சொல்லுவாங்க. தாமரை இலையில , தண்ணி ஒட்டவே ஒட்டாது,ஏன் தெரியுமா?


ரொம்ப வருசத்துக்கு முன்னாடி , மெழுகு போல ஒரு பூச்சு தாமரை இலை மேலே இருக்கு, இந்த பூச்சு தான் தண்ணி ஒட்டாததுக்கு காரணம்னு ஆராய்சி செய்து சொன்னாங்க. ஆன சில வருஷத்துக்கு முன்னாடி தான் மிகவும் சிறிய பொருட்களை தெளிவா பார்க்கும், எலக்ட்ரான் நுண் நோக்கி கண்டு பிடிக்கப்பட்டது. இந்த எலக்ட்ரான் நுண் நோக்கி மூலமா பார்த போது, சின்னசின்னதா, நிறைய குன்று போல அமைப்ப பார்த்துடு, இந்த மெழுகு பூச்சு குன்று போல இருக்கும் அமைப்புக்கு மேல இருக்குனு முடிவுக்கு வந்தாங்க (1). இந்த சிறப்பு அம்சம் தான் தாமரையில தண்ணி ஒட்டாம இருக்க செய்யுதுனு சொல்லி இவங்க கண்டுபிடிப்புக்கு தாமரை விளைவுனு ( Lotus effect ) பேரு வைச்சாங்க.





இந்த விளைவ பயன் படுத்தி இன்னைக்கு சுய-தூய்மை (self-cleaning) தன்மையுடைய, பரப்புக்கள் தயாரிக்க படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆடைகள் இன்று நேனோ- கேர் (nano-care) என்னும் பெயரில் விற்க்கப்படுகின்றது (2). இது போல தயாரிக்க படும், கண்ணாடி சன்னலுக்கு சோப்பு போடாம தண்ணி மட்டும் விட்டு கழுவினாலே சுத்தமாகிவிடும். கார் கண்ணாடிகளுக்கு இந்த தொழில் நுட்பத்த இப்ப பயன் படுத்தறாங்க. இங்கே இருக்கிற படம் இயற்கையான தாமரை இலையும், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தாமரை போன்ற பரப்புக்களை காட்டுகின்றது.



இதை போலவே தான் பாலைவனத்தில் வசிக்கும் ஒருவிதமான வண்டினை பார்த்து காற்றில் உள்ள நீர்னை பிரிக்கும் தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. அது என்ன என்பதை விரைவில் பார்போம்.



(1) Cheng, Y T, Rodak, D E, Wong, C A and Hayden C A.

“Effects of micro- and nano-structures on the self-cleaning behaviour of lotus leaves.”

Nanotechnology 17 (2006) 1359-1362.


No comments: